Tuesday, February 12, 2019

Story of Knight Napoleon மாவீரன் நெப்போலியன் பற்றிய கதை

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ்_மாவீரன்_நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.
தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது.
சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது. அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும், தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.
ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவனம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார்.
பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது.
அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது.
ஆனால் அவரின் மன உளைச்சலும்..பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது. 
மன_உளைச்சலும்
பதட்டமும் இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையாது.
பொறுமையும்,நிதானமும் இருந்தால் வெற்றியாளராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.

Thursday, February 7, 2019

Comedy கதை😂😂

💐💐நாம ஒன்னு நினைச்சா....?????*
💐💐தெய்வம் ஒன்னு நினைக்குது...!!!!*
 
கோவில் கூட்டத்தில் வரிசையில்..!!

உண்டியல் அருகே வந்தவுடன்..
ஒரு பத்து ரூபாய் எடுத்துப் போட்டேன்,
அதைப் பலர் பார்க்கும் படி பெருமிதமாக,

ஆனால்....  அது சற்று கிழிந்து இருந்தது.. வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்தது.

சரி.... விடு....
கடவுள் தானே அவரிடம் செல்லாதது ஏதேனும் உண்டோ....??

வரும் பணம் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும் என்று ...

வரிசை நகர... நகர.... சில வினாடிகளில் பின்னாளில் இருந்து எனது தோளை தொட்டு ஒருவர்.... 2000 ஆயிரம் ரூபாய் நோட்டை என்னிடம் கொடுத்தார்...

அவருக்கு உண்டியல் தூரமாக இருக்கவே சரி என்று நான் அதை வாங்கி உண்டியலில் போட்டு விட்டு,

சே.... எவ்வளவு பக்தி இவருக்கு என்று வியந்தேன்..

பின் கூப்பிடு பிள்ளையாரை....
வணங்கி விட்டு , வெளியே வந்தால்...

அவரும் அருகே நடக்க  அவரிடம்..

சார் நீங்கள் உண்மையிலேயே....
கிரேட் என்றேன்..
அவர் புரியாமல் எதுக்கு என்றார்...

கடவுளின் உண்டியலில் ரூ 2000 போடுகிறீர்களே.... எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றேன்.. நான்..

நானா..???? இல்லங்க.. சார்.. ???

சார் நீங்க காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து....
அந்த 2000 ரூபாய் நோட்டு விழுந்தது..

அதைத்தான் நான் எடுத்து உங்ஙளுக்கு  கொடுத்தேன்..

அதை வாங்கி உண்டியலில் போட்ட நீங்கள்தான்.... உன்னதமான கிரேட் மேன்.. என்றார்....

டமார்னு ஒரு சத்தம்....
(வேற என்ன நெஞ்சு தான்)

இதுதான் கடவுளின் விளையாட்டு ...!!!😄😄😄😄😄😄😄😄😄😄

Tuesday, February 5, 2019

Tamil Siddhar rare photos சித்தர் படங்கள்

மகான் சட்டை நாதர் - www.alllockkey.blogspot.com
மகான் சட்டை நாதர்

மகான்இராமதேவர்

மகான் மச்சமுனி

மகான் கோரக்கர்

மகான் திருமூலர்

மகான் பாம்பாட்டி சித்தர்

மகான் அகத்தியர்

மகான்கருவூரார்

மகான் அமுகண்ணர்

மகான் கமலமுனி

மகான் சுந்தரானந்தர்

மகான் தேரையர்

மகான் போகர்

மகான் புலிபபாணி

மகான் புண்ணாக்கீசர்

மகான் இடைக்காடர்

மகான் குதம்பை சித்தர்

மகான் காலாங்கிநாதர்

Philosophical lines தத்துவ வரிகள்

சாதிக்க நினைப்பவன் மட்டுமே அதிகமாக சோதிக்கப்படுகிறான்.
*தத்துவ வரிகள்..!*
பல துன்பங்களையும், சின்ன சின்ன அவமானங்களையும் சந்தித்தால் தான் வாழ்க்கையில் உயரமுடியும்...
சாதிக்க நினைப்பவன் மட்டுமே அதிகமாக சோதிக்கபடுகிறான். பிறரை அதிகமாக நேசிப்பவன் மட்டுமே அதிகமாக காயப்படுகிறான்.
இது என்னுடையது என்று நினைக்கும் வரை, எதையும் விட்டுக்கொடுக்க நாம் தயாரில்லை. எதுவும் என்னுடையது அல்ல என்கிற பக்குவம் வரும்போது, விட்டுக்கொடுக்க நம்மிடம் ஏதும் இருப்பதில்லை.
உதிர்ந்த பூக்களுக்காக கண்ணீர் விடாதே. மலர்கின்ற பூக்களுக்கு தண்ணீர் விடு...
 துன்பம் வரும் போதும், இன்பம் வரும் போதும் கூடவே இருக்கும் ஒரே நண்பன் நமது உழைப்பு மட்டும் தான்.
உன் மீது பிரியம் உள்ளவர்களி;டம் நீ பொய்யை சொன்னாலும் நம்பிவிடுவார்கள்.. உன் மீது பிரியம் இல்லாதவர்களிடம் நீ உண்மையை சொன்னாலும் நம்பமாட்டார்கள்.
குறைகளை தன்னிடம் தேடுபவன் தெளிவடைகின்றான். குறைகளை பிறரிடம் தேடுபவன் களங்கப்படுகிறான்.
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் கூறும் அறிவுரைகள்
ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.
(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)
தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.*
*(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)*
சேமித்த பிறகு இருக்கும் மீதத்தைதான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.
(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)
ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....
(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)
அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...
(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)
நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....
(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)

Story of Knight Napoleon மாவீரன் நெப்போலியன் பற்றிய கதை

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ்_மாவீரன்_நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டி...