Tuesday, February 12, 2019

Story of Knight Napoleon மாவீரன் நெப்போலியன் பற்றிய கதை

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ்_மாவீரன்_நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.
தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது.
சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது. அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும், தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.
ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவனம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார்.
பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது.
அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது.
ஆனால் அவரின் மன உளைச்சலும்..பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது. 
மன_உளைச்சலும்
பதட்டமும் இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையாது.
பொறுமையும்,நிதானமும் இருந்தால் வெற்றியாளராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.

Story of Knight Napoleon மாவீரன் நெப்போலியன் பற்றிய கதை

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ்_மாவீரன்_நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டி...