சாதிக்க நினைப்பவன் மட்டுமே அதிகமாக சோதிக்கப்படுகிறான்.
*தத்துவ வரிகள்..!*
பல துன்பங்களையும், சின்ன சின்ன அவமானங்களையும் சந்தித்தால் தான் வாழ்க்கையில் உயரமுடியும்...
சாதிக்க நினைப்பவன் மட்டுமே அதிகமாக சோதிக்கபடுகிறான். பிறரை அதிகமாக நேசிப்பவன் மட்டுமே அதிகமாக காயப்படுகிறான்.
இது என்னுடையது என்று நினைக்கும் வரை, எதையும் விட்டுக்கொடுக்க நாம் தயாரில்லை. எதுவும் என்னுடையது அல்ல என்கிற பக்குவம் வரும்போது, விட்டுக்கொடுக்க நம்மிடம் ஏதும் இருப்பதில்லை.
உதிர்ந்த பூக்களுக்காக கண்ணீர் விடாதே. மலர்கின்ற பூக்களுக்கு தண்ணீர் விடு...
உதிர்ந்த பூக்களுக்காக கண்ணீர் விடாதே. மலர்கின்ற பூக்களுக்கு தண்ணீர் விடு...
துன்பம் வரும் போதும், இன்பம் வரும் போதும் கூடவே இருக்கும் ஒரே நண்பன் நமது உழைப்பு மட்டும் தான்.
உன் மீது பிரியம் உள்ளவர்களி;டம் நீ பொய்யை சொன்னாலும் நம்பிவிடுவார்கள்.. உன் மீது பிரியம் இல்லாதவர்களிடம் நீ உண்மையை சொன்னாலும் நம்பமாட்டார்கள்.
குறைகளை தன்னிடம் தேடுபவன் தெளிவடைகின்றான். குறைகளை பிறரிடம் தேடுபவன் களங்கப்படுகிறான்.
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் கூறும் அறிவுரைகள்
ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.
(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)
(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)
தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.*
*(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)*
*(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)*
சேமித்த பிறகு இருக்கும் மீதத்தைதான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.
(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)
(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)
ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....
(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)
(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)
அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...
(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)
(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)
நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....
(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)
(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)